Comedy King – Goundamani

கருப்பையாவின் மகன் சுப்பிரமணி ன்னு சொன்னா, அவரு யாருன்னுதான் எல்லாரும் கேட்பார்கள். அவர் யாருன்னு தெரிய வைக்க பெருசாலாம் மெனக்கெட வேண்டாங்க, இன்னும் சில வரிகளில் உங்க உதட்டில் புன்னகையோட அவரே அறிமுகமாயிடுவாரு.

‘மெக்கானிக்’ மாணிக்கம்,
‘பன்னிக்குட்டி’ ராமசாமி,
‘பிக்பாக்கெட்’ பெரியசாமி
‘சில்வர்ஸ்பூன்’ சில்பாகுமார்
நாயக் ‘கல்’ நாயக்

இந்த பேரெல்லாம் கேட்ட உடனே உங்க மனசுல கவுண்டமணி சார் அந்தந்த கேரக்டரா நியாபகம் வந்தாருன்னா, உங்களுக்கு ஒரு சல்யூட்.. உங்க சென்ஸ் ஆப் ஹியுமரி லெவல் வெரி ஹை…நம்ம கவுண்டமணி சார் தாங்க அந்த சுப்பிரமணி கருப்பையா.

தமிழ் சினிமா வரலாற்றில் கவுண்டமணி சார் ஒரு பெரும் பகுதிய ஆக்கிரமிச்சி அதில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக்கொண்டு நகைச்சுவை சிம்மாசனத்துல என்றென்றும் மன்னராக அமர்ந்திருக்கார் என்றால் அது உண்மை !

“மனோ, இங்க பார்றா யாரு வந்துருக்காங்கன்னு, கருவாடு வந்துருக்குது”ன்னு உலகநாயகனையோ,
“எவ்ளோ படிச்சிருக்க? ஒரு வேலையும் செய்யத்தெரியாம வர வேண்டியது”ன்னு சூப்பர் ஸ்டாரையோ உரிமையா கலாய்க்கக் கூடியே ஒரே ஆள் நம்ம கவுண்டர் மஹான் தான்.

தமிழ் சினிமா ரசிகர்களை குறிப்பிட்ட ஹீரோ/ஹீரோயின்/டைரக்டர் ரசிகர்களாக வகைப்படுத்தலாம், ஆனா இவங்க எல்லாரும்
நிச்சயமா கவுண்டமணி சாருக்கு ரசிகர்களாத்தான் இருப்பாங்க.

நாம எந்த மனநிலைல இருந்தாலும் நம்மள நகைச்சுவை நிலைக்கு விரைவில் கொண்டு வருவதற்கு கவுண்டமணி சாரால மட்டுமே முடியும்…இவரோட பொலிடிகல் சட்டையர் பஞ்ச்கள மறக்க முடியுமா?

Goundamani-All In All Azhaguraja

1984ல வெளிவந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல கவுண்டமணி சார் ‘ஆல்-இன்-ஆல்’ அழகு ராஜா.
2013ல அதே பேருல ஒரு படம் கார்த்திக்/சந்தானம் காம்போல வெளி வந்தது. இது தான் அந்த கேரக்டரோட வெயிட்டேஜ். கவுண்டமணி சாரோட இன்ஃப்ளூயன்ஸ்.

நம்ம வாழ்க்கைல எந்த ஒரு சூழ்நிலைக்கும், கவுண்டமணி சாரோட Counter காமெடி டைலாக் பொருந்தி வரும்..கவுண்டமணி சார் நிச்சயம் ஒரு தீர்க்கதரிசிதான். இப்போ நடந்து முடிந்த தேர்தலுக்கு கூட அவோரட Counter அப்படியே பொருந்தும்.

‘மை ரியாக்ஷன் நௌ’ சொல்றதாகட்டும், டப்ஸ்மாஸ் பண்றதாகட்டும் கவுண்டமணி சார் இல்லாம இதெல்லாம் செய்ய முடியாது என்பது நிதர்சனம்.

அரசியல், பொதுவாழ்வு, பஞ்சாயத்து, காவல், கல்வி, குடும்பம், ஆன்மிகம், இப்படி எந்த துறையையும் அவர் விட்டுவச்சதே இல்ல, வெறும் நகைச்சுவையாக மட்டுமில்லாம, சமூக கருத்துக்களை அதனோடு சேர்த்து தருவதில் அவருக்கு நிகர் அவரே.

இந்த தருணத்தில் நாம கவுண்டமணி சாரோட காமெடி டூயோ செந்தில் அவர்களுக்கும் நன்றி தெரிவிச்சிக்கணும்..

வாழ்க கவுண்டர் மஹான்
வளர்க அவர் புகழ் மென்மேலும்

உங்களுக்காக கவுண்டமணி அவர்களின் எவர்க்ரீன் பஞ்ச்..

“ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கபூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு?”

“டேய் தகப்பா..”

“ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி”

“அய்யோ.. இப்போ நா எதையாவது வாங்கணுமே.. இந்த தெரு என்ன விலைன்னு கேளு”

“நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது, என் கெரகம் சைக்கிள் கட வச்சிருக்கேன்”

“காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்குறேன்”

“கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கணும்டா”

“இது உலக நடிப்புடா சாமி”

“க்ரீஸ் டப்பாவ எப்டி எட்டி ஒதச்ச?”

“பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா?”

“என் அக்கா மகளே இந்து”

“உங்கக்காளுக்கு சூப்பு வக்கத் தெரியும்னே எனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும்”

“நா இங்க ரொம்ப பிசி… இத பத்தி ஹோம் மினிஸ்டர்கிட்ட பேசுறேன்”

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.