‘ஆச்சி’ மனோரமா

அவங்களோட இயற்பெயர் கோபி சாந்தா
சினிமாவில் மனோரமா, ஆனால்
என்றென்றும் நம் மனங்களில் ‘ஆச்சி’

ஆச்சி வெறும் வார்த்தை இல்லைங்க
தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த அன்பு !

aaachhi


விருதுகளும், மரியாதைகளும்
1200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்து கின்னஸ் சாதனை,
5000க்கு அதிகமாக மேடை நாடகங்கள்
தேசிய விருது
கலைமாமணி விருது
பத்மஸ்ரீ விருது
பெண் சிவாஜி
டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது(மலேசியா)
கலா சாகர் விருது(கேரளா)
எக்ஸ்பிரஸ் விருது
அண்ணா விருது
என்.எஸ்.கே விருது
எம்.ஜி.ஆர். விருது
ஜெயலலிதா விருது
மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’

இது இவங்க வாங்குன விருதுகள், இவருடன் நடித்தவர்களுக்கு இவருடன் நடித்ததே விருதுதான்.

aachi

நாடகத் துறையில் ஒரு பயணம்

ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.

achi1

திரைப்படத்துறையில் அவரது பயணம்

அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.

5 முதல்வர்களுடன் நடித்துள்ள மனோரமா

தமிழகத்தில் கடந்த 1967 முதல் 2016 வரையுள்ள காலகட்டத்தில் பெரும்பாலும் முதல்வராக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நால்வருடனும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மனோரமா நடித்துள்ளார். இவர்கள் நால்வருடன் மட்டுமல்ல முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வர் என்டிஆர் உடனும் மனோரமா நடித்துள்ளார்.
தமிழ் தவிரத் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து மனோரமா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை தனி.

நகைச்சுவை நடிகை என்ற அடையாளத்தைத் தமிழ் சினிமாவில் உருவாக்கிய மனோரமா
மனோரமா நடிக்கத் துவங்கிய சமயத்தில் நகைச்சுவை நடிகைகள் ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக ஓரிரு காட்சிகளில் படத்தில் தலைகாட்டிவிட்டு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தனர்.
ஆனால், அந்த நிலையை மாற்றிக் காட்டியவர் மனோரமா. மனோரமாவுக்கு பிறகு இன்று நகைச்சுவை நடிகைகளுக்கு ஒரு தனி அடையாளம் உருவானது.
கலையுலக பின்புலம் எதுவும் இல்லாமல் வந்த மனோரமா நாடகங்கள் , திரைப்படங்கள், தொலைக்காட்சி என பல தளங்களிலும், நடிப்பு, பாடல் என பல அம்சங்களில் நீங்காத முத்திரை படைத்தார்.
திரைப்படங்களில் ஒரு பாடல் காட்சியின் இடைவெளியில் திடீர் பணக்காரர்கள் உருவாவது போல இது மாயமந்திரம் இல்லை. திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் எண்ணற்ற சவால்களை சந்தித்து, நாளும் போராடியே இந்த சாதனையை மனோரமா படைத்துள்ளார்.
மனோரமா ஒருமுறை தான் அளித்த பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்லியிருப்பார், ”கடைசி வரை நடிச்சிகிட்டே இருக்கணும்; சினிமா இல்லைனா நாடகம் அதுவும் இல்லைனா தெருக்கூத்தில் கூட நடிக்கத் தொடங்கிவிடுவேன். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்”
அதனால் தானோ என்னவோ கடைசி இரண்டு ஆண்டுகளில் உடல்நலமில்லாமல் பெரிதாக நடிக்கவோ, விழாக்களில் கலந்து கொள்ளவோ முடியாத மனோரமா, 2015 அக்டோபரில் காலமானார்.

கடைசி வரை நடிக்க முடியவில்லையென்றாலும், இறுதி மூச்சு வரை அவர் சினிமா மற்றும் நடிப்பு குறித்து மட்டும்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள் அவரது ரசிகர்களும், அவரை அறிந்தவர்களும்.

வா வாத்யாரே ஊட்டாண்ட – நீ
வராங்காட்டினா விடமாட்டேன்
ஜாம் பஜார் ஜக்கு – நான்
சைதாப்பேட்ட கொக்கு

ஏ! தில்லான்டோமரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன்
ஷோக்காப் பாட்டு பாடுவேன்
நேக்கா ஓட்டம் ஓடுவேன்

‘டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தாட்டாதே…’

‘ஒங்க நாயனத்துலதே(ங்) அப்படி சத்தம் வருதா…?’

‘கண்ணம்மா… கம்முன்னு கட..’

‘காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்தவ சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மதராஸி’

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.