THALA59 ! தல, H.வினோத் , யுவன் – May 1, 2019

தல அஜித்தின் 59வது திரைப்படத்தின் துவக்க பூஜை இன்று நடந்தது !

சதுரங்கவேட்டை , தீரம் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய H.வினோத் இயக்குகின்றார் ! மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் “பே வ்யூ ” ப்ரொடக்க்ஷன் கம்பெனி இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளது .. இதை குறித்து போனி கப்பூர் அளித்த பேட்டியில் ,

“இங்கிலிஷ் – விங்கிலீஷ் படப்பிடிப்பின் போதே தல அஜித்தை வைத்து சொந்தமாக படம் தயாரிக்க வேண்டுமென்று ஸ்ரீதேவி விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் , அஜித்தின் 60-வது படமும் தங்கள் நிறுவனமே தயாரிக்க உள்ளது என்றும் கூறினார் !”

இத்திரைப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா ! நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தல + யுவனின் வெற்றிக்கூட்டணி அமைய உள்ளது ! ஒளிப்பதிவு “நீரவ் ஷா” என்பது படத்திற்கு கூடுதல் பலம் , அஜித்தின் பில்லா படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு . அமிதாப் பச்சன் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த வெற்றி படமான “பிங்க்” திரைப்படத்தின் ரிமேக் எனினும் தமிழ்நாட்டிற்கும் தல அஜித்துக்கும் அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக கதை அமைத்துள்ளார் H.வினோத் என்பது நமக்கு கிடைத்த தகவல் ! இத்திரைப்படத்தின் பூஜையில் “ரங்க ராஜ் பாண்டே”வும் கலந்து கொண்டார் … முக்கிய கதா பாத்திரமும் ஏற்க உள்ளார் என்பது பரவலான பேச்சு !

Capture3

DuYmMOoU0AAiAu9

DuYcsvyUwAEeSyf

Capture

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.