தில்லானா மோகனாம்பாள் [1968]

சிகரங்களின் சங்கமம் :

சிக்கல் சண்முகசுந்தரம், மோகனா, வைத்தி, ஜில் ஜில் ரமாமணி இவர்களெல்லாம் யாரென்று உங்களுக்குத் தெரியாதென்றால், நான் மூன்று எண்ணுவதற்குள் விலகிவிடுங்கள்…
1..2…3….

தில்லானா மோகனாம்பாள்
தில்லானா மோகனாம்பாள்

இன்னுமா கூட இருக்கிறிர்கள்… தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி.


தமிழ்த் திரையுலக வரலாற்றில், இத்தனை கலைச் சிகரங்கள் ஒன்று சேர்ந்த இன்னொரு படம் இருக்குமா என்பது சந்தேகமே! சிவாஜி, பத்மினி, A.P.நாகராஜன், கண்ணதாசன், K. V. மகாதேவன், மதுரை சகோதரர்கள் எம்.பி.என்.சேதுராமன் மற்றும் எம்.பி.என்.பொன்னுச்சாமி, நாகேஷ், மனோரமா, T. S. பாலையா, தங்கவேலு, T. R. ராமச்சந்திரன், இந்தப் பட்டியல் பெரியது. இத்தனை மேதைகள் இணைந்த ஒரு படம் மிகக் சிறப்பாக இருந்தே ஆகவேண்டும்.

தில்லானா மோகனாம்பாள் நாடகம்
தில்லானா மோகனாம்பாள் நாடகம்

கொத்தமங்கலம் சுப்பு, விகடனில் எழுதிய கதையைத்தான் A.P.N. படமாக்கினார்.  இந்தப் படம் விகடன்ல தொடரா வந்தப்போ கடைசி வாரம் சிக்கல் சண்முகசுந்தரத்துக்கும், தில்லானா மோகனாம்பாளுக்கும் நடக்கப்போற கல்யாணத்துக்கு அடிச்ச பத்திரிக்கைய அப்படியே முழுப்பக்கத்துக்கும் பிரிண்ட் பண்ணியிருந்தாங்களாம். அதுக்கு அவசியமே இல்லாம படத்துல அவங்க காதல் மற்றும் கல்யாணம் நம்ம மனசுலையே பிரிண்ட் ஆகியிருக்கும்.

ஹீரோயின் கதாபாத்திரப் பெயரையே, படத்தோட தலைப்பா வைக்க அனுமதிக்கிற  அளவுக்கு, அந்தக் கால ஹீரோக்கள் பெருந்தன்மையா இருந்திருக்காங்க… இந்தக் கால உதாரணம், ரஜினி (சந்திரமுகி). 

இந்தப் படத்துல, நடிப்பைப் பத்தியோ, பாடல்களைப் பத்தியோ, இசையைப் பத்தியோ, நகைச்சுவையைப் பத்தியோ, வரிகளைப் பத்தியோ, நாதஸ்வர வாசிப்பைப் பத்தியோ, இயக்கத்தைப் பத்தியோ, தனித்தனியா சொன்னாலே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புத்தகம் எழுதணும். 

மொத்தத்துல, பெருமூச்சுதான் விட முடியும்.

ம்ஹும்… எப்படியெல்லாம் படம் எடுத்துருக்காங்க… !!!

Share with your friends !

One thought on “தில்லானா மோகனாம்பாள் [1968]

  1. Classic Film. Expecting more content about the making details, artists, acting , news…. of the film Thillana Mohanambal, ethir neechal, Ratta kanneer, Nenjam marapathillai

Leave a Reply

Your email address will not be published.