“மெல்லிசை மன்னர்” M. S. விஸ்வநாதன்

திரை அரசர்கள்

MSV Sir

‘அத்தான்… என்னத்தான்…’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்புகிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒருமுறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். பணிவுடன் நின்று கேட்டுக்கொண்டு இருந்தார்,  M.S.V. 

சுமார் 3௦ ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகை ஆண்ட M.S.V. அவர்களின் நினைவலைகளில் சில… 

  • உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்! 
  • ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். 
  • “’தேவனே என்னைப் பாருங்கள்…’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்” – விகடன் பொக்கிஷம் பகுதியில் M.S.V. 
  • கண்ணதாசன் பற்றிக் கூறும்போது, ‘கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். 

msv and kannathasan   ‘யாரை நம்பி நான் பொறந்தேன்… போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க…’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், ‘என்ன கவிஞரே… வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், ‘போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதிஇருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ 

   உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, ‘டேய்… நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட ‘விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும். 

  • தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது! 
  • வாலி ஒரு விழாவில், “M.S.V ஐ சந்திக்கும் முன்பு எனக்கு சோற்றுக்கே வழியில்லை, சந்தித்த பிறகு, சோறு உண்ணவே நேரமில்லை…” 
  • இளையராஜா M.S.V. பற்றிக் கூறுகையில், “என்னுடைய புகழ் உட்பட, நான் சம்பாதித்த அனைத்தையும் M.S.V. அவர்களின் காலடிகளில் சமர்பிக்கிறேன்…” 

பிரபல பாப் பாடகர் ‘Elvis Presley’ மறைந்தபோது, “He did not die, He just went back home” என்று ஒரு பத்திரிகையில் எழுதினார்கள்.   

M.S.V க்கும் அது பொருந்தும்… 

M.S.V மறையவில்லை. வானுலகத்தில் இருந்து வந்து, தனது மெல்லிசை என்னும் ஜாலத்தால், நம்மையெல்லாம் மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்திய அவர், வந்த வேலை முடிந்தவுடன், வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.